Monday 3 April 2017

தலை வலி மற்றும் தலைச்சுற்றுக்கு கருவேப்பிலை தைலம்:

தமிழ் மருத்துவம்

தலை வலி மற்றும் தலைச்சுற்றுக்கு கருவேப்பிலை தைலம்:

Image result for head pain      பெரியவர் முதல் சிறியவர் வரை தலை வலி உணராதவர் யாரும் இருக்க முடியாது.அதிலும் தலைச்சுற்று வந்தால் சொல்லவா வேண்டும். இதற்கான நாட்டு மருத்துவத்தை காண்போம்.தலைச்சுற்றை அடியொடு விரட்டும் கருவேப்பிலை தைலம் இதோ.

தேவையான பொருட்கள்:


கருவேப்பிலை         -200கிராம்
மல்லி கீரை           -50கிராம்
சீரகம்                 -50கிராம்
நல்ல எண்ணெய்      -600கிராம்
பசுவின் பால்          -200மில்லி

செய்முறை:


Image result for CURRY LEAVES OIL          கருவேப்பிலையை காம்புகளை நீக்கி நன்றாக அரைத்துக்கொள்ளவும்  மல்லி கீரையையும் மையாக அரைத்துக்கொள்ளவும் சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200மில்லி பாலை ஊற்றி 6மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும் ஒரு மண் பானையில் நல்லெண்ணையை ஊற்றி சிறிது சூடேரியதும் அரைத்து வைத்திருந்த கருவேப்பிலையை போடவும் 5 நிமிடம் மேலும் சூடேரிய பிறகு மல்லியை போடவும் அதன் பின் 5 நிமிடங்கள் கழித்து அரைத்த சீரகத்தை போட்டு தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆரவிடவும் பின்பு ஒரு மெல்லிய துணியை வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.4 நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கருவேப்பிலை தைலத்தை தேய்த்து குளிக்கலாம்.தைலத்தை தேயித்துக் குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தடுக்க வேண்டும். 

No comments:

Post a Comment

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு! லண்டன்: கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்க...