Monday 24 April 2017

தூக்கமின்மை குறைய

தூக்கமின்மை குறைய  

வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.


Image result for saltஅறிகுறிகள்:
  • தூக்கமின்மை.
தேவையான பொருட்கள்:
  1. வெங்காயம்.
  2. உப்பு.
செய்முறை:
வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

Tuesday 11 April 2017

கம்பளி பூச்சு கடித்தல்

கம்பளிபூச்சிகம்பளி பூச்சு கடித்தல்

அறிகுறிகள்:
    வெற்றிலை
  1. புழுவின் உரோமம் மேல் படுதல்.
  2. உடல் முழுவதும் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. வெற்றிலை.
செய்முறை:
ஒரு வெற்றிலையை எடுத்து கடி பட்ட இடத்தில் சாறு வரும் படி அழுத்தி தேய்க்கவும்.

க‌ம்பளிப் பூச்சி க‌டித்த‌ இட‌த்தில் அரிப்பு குறைய


Image result for murungai keeraiஅறிகுறிகள்:
  1. க‌டித்த‌ இட‌த்தில் அரிப்பு.
தேவையான பொருட்கள்:
  1. முருங்கைஇலை.
செய்முறை:
க‌ம்பளிப் பூச்சி க‌டித்த‌ இட‌த்தில் முருங்கை இலையை அரைத்து ப‌ற்றுப்போட‌ அரிப்பு குறையும் .


கம்பளிப் பூச்சியின் உரோமம் பட்ட இடத்தில் அரிப்பு குறைய 

Image result for gingle oil
அறிகுறிகள்:
  1. உரோமம் பட்ட இடத்தில் வீக்கம்.
  2. உரோமம் பட்ட இடத்தில் அரிப்பு.
தேவையான பொருட்கள்:
  1. நல்லெண்ணெய்.
செய்முறை:
கம்பளிப் பூச்சியின் உரோமம் பட்ட இடத்தில் நல்லெண்ணெயை தேய்த்து விட அரிப்பு குறையும்.

பசியின்மை குறைய

பசியின்மை குறைய

சீரகம் சர்க்கரை கறிவேப்பிலை 
அறிகுறிகள்:
  • பசியின்மை.
  • அஜீரணம்.
  • வயிறுஉப்பிசமாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. சீரகம்.
  2. இஞ்சி.
  3. கருவேப்பிலை.
  4. சர்க்கரை.
செய்முறை:
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவைகளை தண்ணீர் விட்டு வேகவைத்து அதனுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.

Wednesday 5 April 2017

வாத மூட்டுவலி குறைய

வாத மூட்டுவலி குறைய:

கடுகு எண்ணெய் வெங்காயச் சாறு 

அறிகுறிகள்:

வாதம்.
  • மூட்டுவலி.
தேவையான பொருட்கள்:
  1. வெங்காயச் சாறு.
  2. கடுகு எண்ணெய்.
செய்முறை:
வெங்காயச் சாற்றை கடுகு எண்ணெயில் கலந்து வலியுள்ள இடத்தில் தடவி வந்தால் வாத மூட்டுவலி குறையும்.

வாதக்காய்ச்சல் குறைய:

கறிவேப்பிலை ஈர்க்கு வேம்பு ஈர்க்கு முருங்கை ஈர்க்கு 
அறிகுறிகள்:
  • வாதக்காய்ச்சல்.
தேவையான பொருட்கள்:
    Image result for nelli
  1. கறிவேப்பிலை ஈர்க்கு.
  2. வேம்பு ஈர்க்கு
  3. முருங்கை ஈர்க்கு.
  4. நெல்லி ஈர்க்கு.
  5. சுக்கு.
  6. மிளகு.
  7. சீரகம்.
செய்முறை:
கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவைகள் 20 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக்காய்ச்சி ஒரு மடக்கு வீதம் தினமும் நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் வாதத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.

கோடை கால சாலட்:

கோடை கால சாலட்:

முலாம் பழம் ஆரஞ்சு பழச்சாறு தர்ப்பூசணி 
தேவையான பொருள்கள்:
  1. முலாம் பழம் = 1
  2. தர்பூசணி = பாதி
  3. ஆரஞ்சு பழச்சாறு = 1 ஸ்பூன்
  4. எலுமிச்சை பழச்சாறு = 2 ஸ்பூன்
  5. மிளகு = கால் ஸ்பூன்
  6. உப்பு = தேவையான அளவு
  7. கொத்தமல்லி இலை = சிறிதளவு
செய்முறை:
  • 1.தர்பூசணி மற்றும் முலாம் பழம் இரண்டையும் தோல் சீவி, விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பழத்துண்டுகளை 5 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து கொள்ளவும்.

  • 2.மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும். கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  • 3.பாத்திரத்தில் எலுமிச்சை பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை அனைத்தையும் ஒன்றாக போட்டு கலந்து வெட்டி வைத்துள்ள பழங்களின் துண்டுகளை போட்டு கலந்து பரிமாறவும்.

கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஆரோக்கியமான சாலட்.
மருத்துவ குணங்கள்:
  • 1.முலாம் பழத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.  இந்த பழத்தை சாப்பிடுவதால் உடலில் அதிக சூடு குறையும்.

  • 2.முலாம் பழத்தில் ஃபைபர் எனப்படும் நார்ச்சத்து உள்ளது. இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

  • 3.மேலும் வைட்டமின் “சி” மற்றும் வைட்டமின் “ஏ” அதிகம் இருப்பதால் புற்று நோய், இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. பக்கவாதம் நோய் வராமல் தடுக்கிறது. செரியாமை, வாய்வு மற்றும் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள்  வராமல் தடுக்கும்.

  • 4.இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அதிக இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிது.

  • 5.மேலும் கர்ப்பமான பெண்கள் சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான பழமாகும். பெண்கள் அதிகமாக சாப்பிட கூடிய பழமாகும். உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய பழம்.
இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுளை சாப்பிட்டு நோயின்றி வாழ்வோம்.

கேரட் கோசுமறி

கேரட் வெள்ளரிக்காய் பச்சை திராட்சை
தேவையான பொருள்கள்:
  1. கேரட் = அரை கிலோ
  2. வெள்ளரிக்காய் = 1
  3. பச்சை திராட்சை = 1
  4. எலுமிச்சைச் சாறு = 1 ஸ்பூன்
  5. சின்ன வெங்காயம் = ஒரு கைப்பிடி அளவு
  6. பச்சை மிளகாய் = 4
  7. இஞ்சி = சிறு துண்டு
  8. பொட்டுக் கடலை = 4 ஸ்பூன்
  9. கொத்தமல்லி = சிறிதளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  1. கேரட்டையும், வெள்ளரிகாயையும் தனித்தனியாகத் துருவிக் கொள்ளவும். பச்சை திராட்சையை உதிர்த்துக் கொள்ளவும்.
  2. இஞ்சியை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டுக் கடலை ஆகியவற்றை மிக்ஸியில் முடிந்த வரை நன்றாக அரைக்கவும்.
  3. ஒரு அகல பாத்திரத்தில் கேரட், வெள்ளரிக்காய், பச்சை திராட்சை, நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கிளறவும். அடுத்து பொட்டுக் கடலை பொடி சேர்த்து ந‌றுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
சுவையான கேரட் கோசுமறி தயார். இதை எல்ல வகை ரைஸோடும் மற்றும் சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
  1. கேரட்டில் வைட்டமின்கள் A, B, C, D, E, G, K மற்றும் கால்சியம், தாமிரம், அயோடின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் சல்பர் உள்ளது
  2. இதனால் குறிப்பாக கண்புரை மற்றும் இதர கண் பிரச்சினைகள் குறையும். உடலுக்கு சக்தியளிக்கிறது. இது இரத்த சோகை, இரத்த ஓட்ட பிரச்சினைகள் மற்றும் தோல் நோய்களை குறைக்கும். செரிமான பிரச்சினை மற்றும் புண்கள், ஆஸ்துமா போன்றவை குறையும்.

Tuesday 4 April 2017

உடல் எடை குறைய

உடல் எடை குறைய

பப்பாளிக்காய்
அறிகுறிகள்:
  • உடல் பருமனாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. பப்பாளிக்காய்.
செய்முறை:
பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


உடல் பருமன் குறைய

Image result for white reddish
Image result for honeyஅறிகுறிகள்:
  • அதிக உடல் பருமன்.
தேவையான பொருட்கள்:
  1. முள்ளங்கி.
  2. தேன்.
செய்முறை:
முள்ளங்கியை துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

உடல் எடை குறைய

Image result for butter milkImage result for curry leaves 

அறிகுறிகள்:
  1. அதிக உடல் எடை.
தேவையான பொருட்கள்:
  1. கறிவேப்பிலை.
  2. மோர்.
செய்முறை:
தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் சேர்த்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு! லண்டன்: கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்க...