Monday 3 April 2017

கோவைக்காயின் சிறப்புகள்

கோவைக்காயின் சிறப்புகள்

கோவைக்காய்:           

Image result for kovakkai           புதர்கலிலும்,வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவையின் முழு தாவரமும் மருத்துவ குணம் கொண்டது.
காய்,கனிகள்,இலைகள்,தண்டு,வேர் போன்றவை மருத்துவ பயன்கள் கொண்டவை.வெல்லரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இந்த எளிமையான காய்கறி கொடி இனத்தை சேர்ந்தது.இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.கனிகள் சென்னிரம் உடையது.
Image result for kovakkai fruit     அதை மென்ரால் நாக்கில் உள்ள புண்கள் ஆரும்.இலைகள்,தண்டு,வேர் ஆகிய பாகங்கலில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோக பொருட்கலோடு கலந்து நீரிழிவு நோய்,வீங்கிய சுரப்பிகள்,தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.கோவைக்காய் பழங்காலத்தில் இருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று.தீவிரம் இல்லத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பயனை தரும் கோவைக்க்காய் சாறு எடுத்து கொல்வதால் சர்க்கரை நோயின் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுவது இல்லை.
 பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா ஹாட்வொர்த் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விள் நோயை குறைக்கும் குணம் உடையது என்று சொல்லப்பட்டது.கோவைக்காய் இரத்தத்தில் சேறும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களுரில் நடத்திய ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்பட்டது.பரம்பரை காரணமாக  நீரிழிவு நோய் இருபவர்கள் கோவைக்காயை 35வயது முதல் உணவில் எடுத்துக்கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணம் உடையது.

கோவைக்காய் பச்சடி செய்முறை:


தேவையானப் பொருட்க்கள்:

Image result for kovakkai thair patchadiகோவைக்காய்      -100கிராம்
மோர்              -1கப்   
இஞ்சி             -சிறிதளவு
மிளகுபொடி        -சிறிதளவு
சீரகப்பொடி        -சிறிதளவு
உப்பு              - தேவையான அளவு
கடுகு,கருவேப்பிலை- தேவையான அளவு

           கோவைக்காயை சிறு சிறு துண்டுக்களாக நறுக்கி அதனுடன் மோர்,இஞ்சி,மிளகுப்பொடி,சீரகப்பொடி,உப்பு சேர்த்து கலந்து அதில் கடுகு,கருவேப்பிலையை தாலித்து சேர்த்தல் கோவைக்காய் பச்சடி தயார்.
           இதை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தல் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.
Image result for kovakkai plant             பட்சையாகவே கோவைக்காயை மென்றுத்துப்பி விட்டலே வாய்ப்புண் ஆறிவிடும்.ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து அரைத்து மோருடன் கழந்து குடித்தாலும் மேர் குறிய அனைத்துப் பலனும் கிடைக்கும்.
             இலை,தண்டு,வேர் கசாயம் மார்புச்சளி சுவாசக்குழாய் அடைப்புக்கு நல்ல மருந்து.
            கடிகலால் ஏற்பட்ட காயங்கல்,புண்கள் மற்றும் அனைத்து வகை தோல் நோயிக்கும் கோவை இலையை அரைத்து கட்டினல் குணமடையும்.

           கோவைக்காய் பித்தம்,இரத்தப்பெருக்கு,வாய்வு,வயிற்றுப்புண் போன்றவற்றை குணப்படுத்த நல்ல மருந்தாகும்.

No comments:

Post a Comment

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு! லண்டன்: கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்க...